அரச சேவைகள் வழமை போன்று இடம்பெறும்! – வெளியான விசேட அறிவிப்பு!

இன்றைய தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply