வங்கிகளுக்கு விடுமுறை – அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் வழமைபோன்று இடம்பெறும்

நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்களும் இன்று இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply