
யாழ்ப்பாணம், ஒக். 10:
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்தவாரம் முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பலாலி-சென்னை இடையிலான விமானக் கட்டணங்கள், கொழும்பு- சென்னை இடையிலான விமானக் கட்டணங்களை விட குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, மலிவான விமானக் கட்டணத்துடன் பலாலி-சென்னை விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண மக்களுக்கு பெரிதும் பயனடைவார்கள் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்திருந்தார்.





