22வது திருத்தம்: சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்த பசில்!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் தலையீட்டின் காரணமாகவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இருந்து இனியும் எந்த நன்மையான விடயங்களையும் எதிர்பார்க்கமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

ருவன்வெல்ல தொகுதியில் நடை பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

22 ஆவது அரசமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் என்று முழு நாடும் எதிர்பார்த் துக் கொண்டிருந்தது. 22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதி காரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், என்ன நடந்தது? திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்ட தினத்துக்கு முதல்நாள். சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி திருத் தத்தை அவர்களில் பெருமளவானோர் எதிர்க்கின்றனர் என்று கூறி னார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படவிருந்த 22 ஆவது திருத்தத்தைப் பிற்போட்டனர். இன்று நாட்டிலும் இல்லாத பஸில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவை நிர்வகிக்கின்றமையே இதற்கான காரணமாகும்.

கோப் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார பஸில் ராஜபக்சவின் பிரதிநிதியாவார்.

ஆனால், இந்தப் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒரு வரே நியமிக்கப்படுவார் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.

இந்த நாடாளுமன்றத்திடமிருந்து எமக்குப் பெரிதாக எதனையும் எதிர் பார்க்கமுடியாது – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply