
திருமண வயதைப் பூர்த்தி செய்யாத (மைனர்) பெண்ணை திருமணம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை பிணையில் விடுவிக்குமாறு மொரட்டுவை பதில் நீதவான் திரு.ஜோசப் பெர்னாண்டோ உத்தரவிட்டார்.
கோரல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியை நன்னடத்தை அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தி நன்னடத்தை அறிக்கையை வரவழைக்குமாறும் பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் 1929 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
பிற செய்திகள்

