
தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்களிடம் முறைகேடு செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் இருந்த கைத்தொலைபேசியை சிறைச்சாலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சிறைச்சாலை அவசரகால பதில் பிரிவினரால் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து சிறைச்சாலை அவசரகால பதில் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்





