
ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும் மாறாத நிலையான தேசிய கொள்கை நாட்டுக்கு தேவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருந்து தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுகள் மாறினாலும் ,நாட்டில் நிலையான கொள்கைப் பிரகடனம் ஒன்று இருந்தால் அதன்படி செயற்பட முடியும்.இது தனி நபர்களால் உருவாக்க முடியாது.அனைவரும் ஒன்று சேர வேண்டும் .நாம் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.இது தொடர்பில் நாடாளுமன்றுக்கு சமர்பிக்கப்படும் போது ,அனைவரும் தமது ஆதரவு மற்றும் ஆலோசனைகளை தர வேண்டும் என்றார்.
பிற செய்திகள்





