
பிரதேசசபை உறுப்பினர்களை குறைப்பது வரவேற்றதக்கது என பாராளுமன்ற உறுப்பினர் வே.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக நான் பிரதேசபை உறுப்பினராக இருக்கும் போது 3 பிரதேச சபை உள்ளடங்களாக
23 உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்தது.இன்று 3 பிரதேச சபைகளாக பிரிக்கப் பட்டிருக்கும் நுவரேலிய மாவட்டத்தில் ஒரு பிரதேச சபைக்கு 22,23 உறுப்பினர்கள் வீதம் 65 க்கு மேற்பட்ட உறுப்பினர்களை காணமுடிகிறது.
நாட்டில் முழு பிரதேச சபைகளும் இவ்வாறுதான். இவர்கள் மக்கள் ஆணை, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு உள்வாங்க படவில்லை. நியமனங்களின் ஊடக உள் வாங்கப்பட்டவர்கள்,இவர்கள் தேர்தல் மூலம் போட்டியிட்டு வர வேண்டுமே தவிர,நியமனங்கள் ஊடாக அல்ல.
அப்போது தான் தேவையற்ற செலவினங்களை குறைக்க முடியும்.இல்லலை என்றால் தேவை அற்ற செலவுகள் பிரச்சினைகள் தொடரும்.ஆகவே உறுப்பினர்களை குறைப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
பிற செய்திகள்





