
நாட்டிற்கு மக்கள் விரும்பும் அரசியல் ஸ்திரத்தன்மையை பெற்றுக் கொள்வதற்கு தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் பாடுபடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று இந்த பாராளுமன்றம் சிதைக்கப்படுகின்றது அது மட்டுமன்றி உண்மையான கருத்து பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கவில்லை 2019, 2020 க்கு வாக்களித்த மனோநிலை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் அதே பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கு வெளியில் அந்த கருத்து முற்றாக மாறியுள்ளது.
அதனால்தான் கூடிய விரைவில் தேர்தல் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்க உதவிய 134 பேரின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று தேர்தல் நடத்தக்கூடாது என்பதுதான். அதனால் தான் மக்களுடன் வெளியே செல்ல காத்திருக்கிறோம்.
நாட்டுக்கு மக்கள் விரும்பும் அரசியல் ஸ்திரத்தன்மையை பெற்றுக் கொள்வதற்காக தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக நாங்கள் நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்

