
கடலில் பாய்ந்து 7 கடல் மைல்கள் தொலைவை நீந்தி அரிச்சல்முனை கரையை அடைந்த இலங்கை ஏதிலியிடம் தமிழக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளாந்தம் அதிகரித்து வருகிறது
இந்தநிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கடந்த சில நாட்களாக 5ஆம் மணல் தீடையில் பசியுடன் காத்திருந்தனர்.
அவர்களை பொறுப்பேற்ற தமிழக கடலோர காவல் குழுமம் மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.
அவருடன் பயணித்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்து இளைஞர் ஒருவர் கடற்படையினருக்கு அஞ்சி படகில் இருந்து குதித்துள்ளார்.
இதையடுத்து மாயமான குறித்த இளைஞர் 7 கடல் மைல் தொலைவை நீந்தி அரிச்சல்முனை கரையை அடைந்துள்ளார்.
பின்னர் அவரை தமிழக காவல்துறையினர் மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
பிற செய்திகள்





