சினிமாவில் நுழையும் டோனி: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்தியா,ஒக் 10

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் ‘தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மகேந்திர சிங் டோனி இதற்கு முன்பு இவரது தயாரிப்பில் ‘ரோர் ஆப்தி லையன்’ என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றையும் புராணத்தை அடிப்டையாகக் கொண்டு திரில்லர் படம் ஒன்றையும் தோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மகேந்திர சிங் டோனி இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *