மண்டைதீவு கடலில் மூழ்கிய மீன்பிடிப் படகுகள் கரை திரும்பின!

யாழ்ப்பாணம், மண்டைதீவு முனைக்கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளதாகவும், தொழிலில் ஈடுபட்ட ஐந்து மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குருநகர் மீனவர்கள் படகுகளில் இன்று பிற்பகல் மீன்பிடிக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடலில் திடீரென எழுந்து சுழியில் சிக்கி இரண்டு படகுகள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மூழ்பிய இரண்டு மீன்பிடிப் படகுகளும் கரைக்கு திரும்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மண்டதீவு கடலில் மூழ்கிய படகுகள்; அதிஷ்டவசமாக மீட்கப்பட்ட மீனவர்கள்

Leave a Reply