உலகளாவிய பொருளாதார பின்னடைவின் அபாயம்! எச்சரிக்கும் IMF, உலக வங்கி

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியனவற்றின் தலைவர்கள் உலகளாவிய ரீதியிலான பொருளாதார பின்னடைவின் அபாயம் குறித்து எச்சரித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிணைந்த மாநாடு வொஷிங்டனில் நேற்று ஆரம்பமானது.

இதில் பங்கேற்ற உலக வங்கியின் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம் துரிதகதியில் உயர்வதால் வட்டிவீதம் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இப்படியான செயல்பாடுகள் காரணமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடன் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன.

எப்படியிருப்பினும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில் சந்தை வலுவான நிலையிலேயே உள்ள போதிலும், கடன் செலவுகளின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயுக்களின் விலைகள் அதிகரித்து வருவதனால் யூரோவை பயன்படுத்தும் நாணய நாடுகள் கூட பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இது தவிர, கொவிட்-19 பரவல் சர்வதேச பொருளாதாரத்தில் எதிர்பாராத பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது தவிர, வேறு பல பொருளாதார தாக்கம் காரணமாக உலக பொருளாதாரம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் 4 டிரில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை குறித்த மாநாட்டை அங்கத்துவப்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply