இலங்கைக்கு IMF வழங்கும் நிதி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி வசதி தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி பங்களிப்பு தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவித்ததுடன், அமைச்சர்களுக்கும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது கிடைத்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க ஊழியர்மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *