எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது: திருகோணமலையில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை

திருகோணமலை, ஒக். 11: இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களின் விழுமியங்களும், நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் உள்ளது. எனவே, எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வர் ஆலயத்தின் பரிபாலன சபையினரை இன்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில், ஆலயத்தின் சுற்றுச் சூழலில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply