நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறி இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளதாக தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி கைதிக்கு இந்த கைத்தொலைபேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது இந்த கையடக்கத் தொலைபேசி குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் அதன் தரவுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
இதேவேளே, நிதி மோசடி மோசடி தொடர்பில் இதுவரை அளிக்கப்பட்டுள் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது
திலினி பிரியமாலியுடனான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பிரசாரத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முறைப்பாடு செய்யவுள்ளது.
இந்த முறைப்பாடு இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுவரை அவருடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களின் பெயர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகின்றன.
அதேநேரம், திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்த பட்டியலில் தமது பெயரும் உள்ளடங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முறைப்பாடளித்தார்.
அவ்வாறான மற்றுமொரு கடிதத்தை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவில் டளஸ் அணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவும் அவ்வறான முறைப்பாடொன்றினை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்துள்ளார்.
அத்துடன் சிங்களே தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை நிதி மோசடி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.
திலினி பிரியமாலி தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டது.
226 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி மற்றும் தங்க ஆபரணங்களை முறைகேடாக கையகப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் நிதி வைப்பு மற்றும் மேலும் சில வர்த்தகங்களுக்கான நிதி வைப்புக்காக இலாபத்தை பெற்றுத்தருவதாக கூறி அவர் உலக வர்த்தக மைய மேற்கு கோபுரத்தின் 34ம் தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்றிருந்தார்.
கோடீஸ்வர வர்த்தகர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் அவரது நிறுவனத்தில் வைப்பு செய்துள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் அவரிடம் கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அது மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





