ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும் – சம்பந்தன்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஐ.நா.விலும் சர்வதேச மன்றங்களிலும் பொறுப்புக்கூறலை செய்வதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வை காண்பதாகவும் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது வரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறலை செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி – வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *