ஒரே பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த 42 மாணவர்கள் – இலங்கையில் அதிர்ச்சி

42 பாடசாலை மாணவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கொட்டகலை பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 42 பாடசாலை மாணவர்கள் அவசர அவசரமாக (11) கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலையில் 6ஆம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் 13 ஆண்களும், 29 மாணவிகளும் மயக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றுமொரு மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply