போதை மாத்திரை விவகாரம்- மருத்துவர் மீதும் தாக்குதல்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய இளைஞனொருவன் போதைமாத்திரையை பரிந்துரைக்காமையால் ஆத்திரமடைந்து மருத்துவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுரம் பதவிய ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியே குறித்த இளைஞனின் தாக்குதலுக்க இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் காவல்துறையால் கைதுசெய்ய்பபட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சட்ட மருத்து அதிகாரி அவரது தனியார் மருத்துவ மனையில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை அங்கு சென்ற குறித்த நபர் போதைப்பொருள் பாவனையாளரகள் கூடுதலாக பாதிக்கும் போதை மாத்திரைகள் சிலவற்றை எழுதித் தரும்படி சந்தேகநபர் கோரினார் எனவும் அதற்கு மருத்துவர் மறுப்பு தெரிவித்த காரணத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply