பால் மா ரின்களை திருடிய நபர்!

பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் விலையுயர்ந்த பால் மா ரின்களை திருடி உள்ளார்.

இது அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் பிலியந்தலை மாம்பே பகுதியில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பால் மா ரின்களை திருடிய நபர் அவற்றை தனது காற்சட்டைக்குள் மறைத்து வைப்பதும் சிசிரிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.

குறித்த நபர் மூன்று நாட்களாக தனது பல்பொருள் விற்பனை நிலையத்தில் விலையுயர்ந்த பால் மா ரின்களை திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

Leave a Reply