
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் கிராமசேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை மாற்றுமாறு நேற்றைய தினம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிராமசேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் இருவரும் மக்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தெரிவித்தே கல்மடு நகர் சம்புக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





