”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொணிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினம்

கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் ”முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொணிப் பொருளிலான சர்வதேச சிறுமியர் தினம் இன்று (செவ்வாக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் முட்கொம்பன் பாடசாலை மண்டபத்தில் விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ” முற்றுப்புள்ளி இடுவோம் சிறுவயது திருமணங்களுக்கு” எனும் தொணிப் பொருளிலான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  பல்வேறு செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதேவேளை செயலமர்வில் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச் சித்திரங்கள் துண்டுப்பிரசுரங்கள் ஆக்கங்களாக வெளிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply