இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திர சம்மேளன மாநாடு, ஐக்கிய அரசு இராஜ்ஜியத்தின் தலைநகரான அபுதாபியில் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ரணிலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டில் பங்கேற்கும் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 5 ஆம் திகதி உரையாற்றுவார்.
47 நாடுகள் பங்கேற்கும் இம் மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்துமாறு ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 – 2019 காலப்பகுதியில் குறித்த மாநாட்டின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






