<!–
வரலாற்றின் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு, செங்கோலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன், வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு, மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






