வடக்கு, கிழக்கில் பார்வையற்ற சமூகம் இருக்கிறது, இவர்களது தேவைகளும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,
உலக வெண் பிரம்பு தின விழிப்புணர்விலே இலங்கையில் என்ன நடவடிக்கை செய்ய வேண்டி இருக்கிறது என்பது முக்கிய விடயமாகும். உண்மையில் வெண் பிரம்புக்கான சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. அனைத்து பார்வையற்ற நிறுவனங்களும் இணைந்து இதற்கு அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.
அத்துடன் சமூகத்தில் வெண் பிரம்பை தாங்கிய நபர் ஒருவர் பார்வையற்றவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு பல தேவைகள் இருக்கிறது. இதனை சமூகம் புரிந்து செயல்பட வேண்டும்.
பார்வையற்ற ஒரு மனிதன் எதோ ஒரு தொடுகை மூலம் சூழலை அறிந்துகொள்ளுகிறார். இந்த வெள்ளை பிரம்பினை தட்டிக்கொண்டு போகின்ற பொழுது தான் எங்களுக்கு தடைகள் தெரிகின்றது.
எனவே இந்த தடைகளை இனங்கண்டு தான் அடுத்த செயற்பாட்டினை மேற்கொள்ளுகிறோம். இந்த நாட்டில் வெண் பிரம்புக்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெண் பிரம்பினை தாங்கியவர் ஒரு சாலையில் எந்த இடத்திலும் அவர் கடப்பதற்கான உரிமை இருக்கிறது.
2009 ஆம் ஆண்டு போர் மௌனித்த பின்னர் பற்றவையற்றோர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரபட்டார்கள், இவர்களை பொறுப்பெடுப்பதற்கு பலர் தயக்கம் காட்டினார்கள், அந்த சாமத்தில் பெரும் சிக்கலாக இருந்தது.
இந்த சிக்கல்களை எதிர்கொண்டு இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். இவர்களுடைய மருத்துவ தேவை பார்ர்க்கப்படாமல் இருந்தது. இதனால் நாங்கள் நபர்களை இழக்க வேண்டிய நிலையம் ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வையற்றோர் அனைவரும் இணைந்து நிறுவனம் ஒன்றினை ஆரம்பித்தோம்.
வடக்கு,கிழக்கில் பார்வையற்ற சமூகம் இருக்கிறது, இவர்களது தேவைகளும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்.
இதனை வெளிக்கொணர வேண்டும், எல்லாருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் உட்பட அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தோம்.
பார்வையற்றவர்களை எமது சமூகம் தாங்கள் புண்ணியம் தேடிக்கொள்கின்ற பாவப்பட்ட பிறப்புக்களாகத் தான் பலர் பார்க்கிறார்கள். அந்த கோணத்தில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
ஊதியம் செலுத்துவதற்கு, சாரதி அனுமதி பத்திரம் அவர்களால் பெற இயலாது. அந்த ஒரு குறைபாடு இருக்கிறது. இதனால் அவர்கள் போக்குவரத்து இடர்களை எதிர்கொள்ளுகிறார்கள். அவர்கள் வரையறுக்கப்பட்ட் வாழ்க்கை வட்டத்திற்குள் தான் தங்களுடைய வாழ்க்கையினை கொண்டு நடத்தக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
கண் அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறோம். பார்வையற்ற சமூகம் ஒன்று இங்கு இருக்கிறது, அதனால் அவர்களுடைய வெள்ளை பிரம்பு நாளிலேயாவது அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற விதத்திலே செய்திகளை வெளியிட்டு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..- என்றுள்ளது.
பிற செய்திகள்





