எரிவாயு கலவையில் மாற்றம் செய்ததாக லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவிப்பு!

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களைச் செய்து கடந்த ஜூலை மாதம் பல மாதிரிகளை அறிமுகப்படுத்தியதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளர் திரு.ஐ.விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், சோதனை வெற்றியளிக்காததால் சிலிண்டர்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், தற்போதுள்ள நிலையான அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் கலவையானது நிலையான தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply