
ஆறுமுக நாவலர் பெருமானின் 200 ஆவது நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் 192 வது குருபூசை தினத்தை முன்னிட்டும் நாவலர் பிறந்த மண்ணில் இன்றைய தினம் இலங்கை பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.





