அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது! ஜயசுமன

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் 663 அத்தியாவசிய மருந்துகள் உள்ளது. அவற்றில் 15 மருந்துகளுக்கான குறைபாடுகள் நிலவுகின்ற நிலையில் 8 மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகள் வழங்கப்படுகின்றது.

அடுத்த வாரமளவில் மேலும் மருந்துகள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளது.

அந்த வகையில், நாட்டில் பெருமளவு அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கூற்றுக்களில் எந்தவித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை!

Leave a Reply