பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை!

அடுத்த 2 வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகிய 2 அரச நிறுவனங்களும் பாரிய நட்டத்தில் இயங்கி வருகின்றன. இதில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பயிர்ச்செய்கையை முறைப்படுத்தி வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியதன் மூலம் நட்டத்தில் இயங்கும் 2 நிறுவனங்களும் நட்டத்தை குறைக்க முடிந்துள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச்செய்கையின் மறுமலர்ச்சிக்காக அனைத்து தோட்டங்களிலும் மீண்டும் தேயிலை பயிரிடுவதற்கு இலவசமாக செடிகள் மற்றும் உரம் போன்றவை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான முன்னுரிமைகள் வழங்கப்படாமையே இலங்கையின் வீழ்ச்சிக்கான காரணம்! எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டு

Leave a Reply