மிஹிந்தலை – இலுப்புகன்னிய பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
இல்லுகன்னியா வடக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த மிஹிந்தலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






