இராணுவ கனரக வாகனம் விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியின் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில், இராணுவத்தின் கனரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (01) புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், விபத்தில் காயமடைந்த இராணுவ வாகன சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகந்த – புனானைப் பகுதியிலுள்ள இராணுவ முகாமிலிருந்து ஹிங்குராங்கொட பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

மேலும், இவ் விபத்தின் போது மின் கம்பத்துக்கு அருகில் இருந்த வீட்டின் மீது இராணுவ வாகனம் மோதியபோதும், வீட்டில் இருந்த எவருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply