இலங்கையில் மேலும் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,372 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 15 பெண்களும் 11 ஆண்களும் உள்ளடங்குவதாக மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






