திருகோணமலை – கிண்ணியாவிற்கு ஆசிரியர் தொழிற்சங்கத்தின் இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவி வசந்தா கதபகன்கொட இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த உறவுகளின் வீடுகளுக்கு சென்றுள்ளதுடன் அனுதாபங்களையும் தெரிவித்து உலர் உணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.
போது அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதுடன் இதனை தீர்க்க கிழக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதில் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள்,ஆசிரியர்கள் அதிபர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.






