
மாதகல் குசுமாந்துறைப்பகுதியில் நேற்று காணி அளவிடுவதற்கு எதிரான போராட்டம் நிறைவடைந்து அனைவரும் சென்றபின்னர், மாலைவேளையில், பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி ஒருவருடைய வீட்டுக்குச் சென்ற கடற்படையினர் காணி தொடர்பில் விசாரித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மாதகல் குசுமாந்துறைப்பகுதியில் நேற்றுமுற்பகல் ஒரு பரப்பு காணி கடற்படையின் முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்க முற்பட்ட நிலையில் அது பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிசெல்லாது மீண்டும் அளவிட வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் கடற்படை முகாம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு வருகைதந்த இளவாலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, நில அளவை இடம்பெறாது என்றும் கடற்படையினர் அச்சுறுத்தின் தெரியப்படுத்துங்கள் என்றும் கூறிச்சென்றிருந்தார்.
இந்த நிலையில், மாலை வேளை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.





