திறப்பு விழா!

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா
நாளை வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த குளம், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில், “தூய நகரம்” திட்டத்துக்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும்,
சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் , மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply