கோட்டா ஆட்சியில் சமையல் அறைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை! அநுரகுமார எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக் கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குக் கூடப் பாதுகாப்பாக சென்றுவர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும். அதற்காக அரசு துரிதமாகச் செயற்பட வேண்டும்.

மாறாக குழுக்களை நியமித்து காலத்தை இழுத்தடிக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 6ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை! மாவட்ட அரச அதிபர்

Leave a Reply