ஒமிக்ரான் பிறழ்வு இலங்கைக்குள் வரவில்லை என கூறமுடியாது! ஹேமந்த ஹேரத்

உலகை அச்சுறுத்தி வரும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பிறழ்வு இலங்கைக்குள் வரவில்லை என எவராலும் கூறமுடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஒமிக்ரான் வைரஸ் பிறழ்வு இலங்கைக்குள் நுழைந்துவிட்டதா தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் உறுதியாக கூற முடியாது. உறுதியான தகவல்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

எனினும், உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவியுள்ள விதத்தை பார்க்கும் போது நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது.

இலங்கைக்கு தென்னாபிரிக்காவில் இருந்து நேரடியாக அதிகளவான மக்கள் வருவதில்லை. அதன் காரணமாக மற்றைய நாடுகளை விட நமது நாட்டுக்கு வருவது தாமதமாகக்கூடும்.

நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த மாதிரிக்கு அகப்படும் வரையில் குறித்த வைரஸ் பிறழ்வு நாட்டில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

தில்லையடியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்!

Leave a Reply