இலங்கையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பரவலாக பதிவாகி வரும் நிலையில், எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று முதல் ஆராய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தால் இன்று முதல் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை!






