
கனடாவின் ஒன்ராறியோவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியது.
இதனால் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





