வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு அடுப்பு வெடித்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் சமையல் செய்துவிட்டு அடுப்பை நிறுத்தி வைத்தததன் பின்னர் திடீரென தீப்பிடித்து ஒளிவிட்டு வெடித்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த பெண் எரிவாயு அடுப்பு தீ பற்றி எரியும் போது அயலவரை அழைத்ததாகவும், சேதம் ஏற்படாமல் இருக்க சிலிண்டரிலிருந்து ரெகுலேட்டரை அகற்றியதாகவும் கூறினார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மக்களின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஜேர்மனின் உதவிகள் அதிகரிக்கப்படும்! ஜேர்மன் தூதுவர்

Leave a Reply