கடந்த மாதம் 23 ஆம் திகதி கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்து சம்பவத்தின் போது கிண்ணியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவால், எதிர்வரும் 06 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்திற்கு, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்திற்கு சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பால் முறையிடப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவின் கண்காணிப்பு பிரிவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதுடன், அதன் தொடர் நடவடிக்கையாக குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க தவறியது இலங்கை!






