தமிழர்கள் நலன்சார் நிலைப்பாட்டை அடுத்த மாதம் அமெரிக்கா வெளிப்படுத்தும்! சுமந்திரன் எம்.பி.

பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தீவிர செயல்பாடுகளில் ஈடுபடும் விதத்திலான நாட்டத்தைக் கொண்டிருப்பதுடன், இலங்கையில் அனைத்து சமூகங்களினதும் அபிலாசைகளுடனான அரசியல் தீர்வொன்றைக் காண்பதிலும் அமெரிக்கா அக்கறை கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன தெரிவித்தார்.

லண்டனில் அவரைச் சந்தித்த வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

மேலும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கும் விஜயம் செய்திருந்த சுமந்திரன், இரு நாடுகளிலும் அரசு தரப்பினருடன் தாம் மேற்கொண்ட சந்திப்புகள் பயனுடையதாக இருந்ததாகத் தெரிவித்தார்.

சுமந்திரனுடன் இந்த நாடுகளில் பயணம் மேற்கொண்டிருந்த இரா. சாணக்கியன் எம்.பி. யும் சந்திப்பில் உடனிருந்தார்.

ஜனவரி மாத நடுப்பகுதியில், இலங்கையில் தமிழர் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை அமெரிக்கா வெளிப்படுத்தும் என்றும் சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், இத்தேர்தலை நடத்த வேண்டியது அவசரமானதென்றும், அதனை வலியுறுத்தும் விதத்தில் அதற்கான தனது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க பேச்சுகள் தொடர்பில் அமெரிக்காவில் இந்திய தரப்பினரையும் தாம் சந்தித்து விவரங்களைத் தெரிவித்ததாகவும், இலங்கை திரும்பியதும் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் ஏனைய கட்சியினரையும் அழைத்து, இவ் விவரங்களைக் கலந்தாலோசிப்பார் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பை கையால் பிடித்த பெண்! யாழில் சம்பவம்

Leave a Reply