அம்பாறை, மஹஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகமுயாய பிரதேசத்தில், நபரொருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
போகமுயாய, மஹஓய பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
காட்டு யானைகளின் வருகையை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்த பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
போகமுயாய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.






