அத்தியாவசியப் பொருள்கள் விலைகள் குறைந்தன– வர்த்தக அமைச்சர் பந்துல

அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றில் விலைகள் குறைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவு பொருள்ள் தொடர்பில் நேற்று (18)அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளது

நாடு அரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும்,

வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும்,

சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்,

கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Leave a Reply