நாட்டின் ஏழு மூளைகள் உள்ள நிதி அமைச்சர், இப்போது சமையல் எரிவாயுவை வெடிக்க வைக்கிறார் என நாடளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்திலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பாரிய பிரச்சினையாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு உருவெடுத்துள்ளது. ஆனால், அது பற்றி தெளிவான அறிக்கை அரசு இன்னமும் தரவில்லை.
இன்று துறைமுகம் சார்ந்த விடயம் கலந்துரையாடப்பட்டாலும், முக்கிய பிரச்சினை இந்த சிலிண்டர்தான். நான் அமைச்சராக இருந்தால் பொறுப்புடன் நடந்து கொள்வேன்.
இப்படி கடன் கடன் என்று கூறி நாட்டின் வளங்களை விற்க மாட்டேன். துறைமுகங்களை மூடிவிட்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கு விற்று விடுங்கள்.
நாட்டின் வளங்களை விற்று கடன் அடைக்கும் ஒரே அரசு இது தான் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.






