அசாத் சாலி விடுதலை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலையாகியுள்ளார்.

கடந்த 2021 மார்ச் மாதம் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இன, மத சீர்குலைவை ஏற்படுத்தும், வன்மத்தை தூண்டும் வகையிலான கருத்தொன்றை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்க செய்யப்பட்ட வழக்கின் மனுதாரர் தரப்பு விசாரணைகள் கடந்த நவம்பர் 19ஆம் திகதி நிறைவடைந்திருந்தன.

இந்நிலையில், இவ்வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான அசாத் சாலியை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டார்.

Leave a Reply