முந்தல் பொலிஸ் பிரிவுற்குற்பட்ட மதுரங்குளி மெல்லம்பிட்டி பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையில், இனந்தெரியாத ஆணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீரோடையில் மீனவர் ஒருவர் மீன்பிடிக்கச் சென்றபோதே சடலத்தை கண்டு, முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழஙகியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டனர்.
குறித்த சடலம் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






