யாழ். பல்கலையில் ஆய்வு நூல்கள் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசியர் சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், யாழ். பல்கலைக் கழகத் தமிழ்துறை மேனாள் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா, வரலாற்றுத்துறை மேனாள் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த. சத்தியமூர்த்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply