பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை! திலும் அமுனுகம

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இதுவரை இல்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமது பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றவையென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா!

Leave a Reply