படைத்தரப்பின் ஆதரவு இல்லாமல் நாட்டுக்குள் போதைப்பொருள் நுழையாது – தமிழ் எம்.பி சாடல்

இன்றைய சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில்:

நாட்டுக்குள் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.அதிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.இதனை ஏன் அரசு தடுக்கவில்லை.ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் முதல் நாளே அதிரடியாக வீட்டைத் தேடி கண்டு பிடித்து கைது செய்யும் ,புலனாய்வுத் துறையால் ,ஏன் போதைப்பொருள் பாவனையை கட்டுப் படுத்த முடியவில்லை.

படைத்தரப்பின் ஆதரவு இல்லாமல்,அரசியல் செல்வாக்கு இல்லாமல் நாட்டுக்குள் போதைப்பொருள் நுழையாது .ஆகவே நாடு இருக்கும் நிலையில் ,இதனை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கில் இனப்படுகொலை நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.ஆகவே அதனை செய்தவர்களே இங்கே தம்மைத் தாமே விசாரணை செய்வது வேடிக்கையானது.அதனால் தான் நாம் சர்வதேசத்தை நாடுகின்றோம்.உண்மையை மூடி மறைக்க முடியாது.இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இதன் உண்மை நிலையை வெளிநாட்டு அமைச்சர் மறைக்க முடியாது.உண்மைகளை மறைக்க வேண்டாம் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply